×

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் 54 பிரமாண்ட சிலைகள் கொண்ட டைனோசர் பூங்கா டிசம்பரில் திறப்பு

புதுடெல்லி: சராய் காலே கானில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான டைனோசர் பூங்காவின் பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டன. அடுத்த மாதம் இறுதியில் இது திறக்கப்பட உள்ளது.டெல்லியில் பொழுதுப் போக்கு பூங்காக்களை அமைப்பதில் மாநகராட்சி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த வகையில் ஏற்கனவே நாட்டின் சுதந்திர போராட்டத்தை மக்களுக்கு நினைவுப்படுத்தும் வகையில் பிரமாண்டமான பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பழைய இரும்பு பொருட்களை கொண்டு சுதந்திரப் போராட்ட தலைவர்கள், சுதந்திர போராட்ட வரலாற்றை பறைசாட்டும் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், சராய் காலே கானில் 3.5 ஏக்கரில் பிரமாண்டமான முறையில் டைனோசர் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் கவர்வதற்கான அனைத்து பொழுதுப்போக்கு அம்சங்களும் இதில் இடம் பெறுகின்றன.

குறிப்பாக, சிறுவர்களை கவரக் கூடிய வகையில் விதவிதமான பிரமாண்ட டைனோசர்களின் சிற்பம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் போன்றவை அமைக்கப்படுகின்றன. 15 வகையான டைனோசர் வகைகளின் சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 54 பிரமாண்ட சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 9 முதல் 65 மீட்டர் நீளம் கொண்டவை. சிலையின் அதிகப்பட்ச அகலம் 54 மீட்டர். ‘ஜுராசிக் பார்க்’ என்ற ஆங்கில திரைப்படத்தில் வருவது போல், இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள டைனோசர் சிலைகள் பல்வேறு ஒலிகளை எழுப்புவது போன்ற ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. இது சிறுவர்களை அதிகம் கவரும். மேலும், நெருப்பை கக்குவது, வாகனங்களை அடித்து நொறுக்குவது போன்ற வடிவங்களுடனும் சிலைகள் வடிக்கப்பட்டு இருக்கின்றன ஏற்கனவே, இந்த பூங்காவின் பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டன.அடுத்த மாதம் இறுதிக்குள் எஞ்சியுள்ள பணிகளும் முடிக்கப்பட்டு, பூங்கா திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ‘பூங்காவுக்கான நுழைவு கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பூங்கா திறக்கப்படும் நேரத்தில் அது முடிவு செய்யப்படும்,’ என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் 54 பிரமாண்ட சிலைகள் கொண்ட டைனோசர் பூங்கா டிசம்பரில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Sarai Kale Khan ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...